குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில் காவலர் சகிதம் ரோந்து சென்ற போது,
சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் ராஜாவூர் பகுதியை சேர்ந்த அருண்ஜெனித் என்ற ஜெனித் 25. மற்றும் வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சதீஷ் 20. மற்றும் முத்துகிருஷ்ணன் 22. என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவர்கள் வைத்திருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தார். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாயிலட்சுமி அவர்கள், கஞ்சா விற்பனை செய்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.