மதுரை : மதுரை மாநகர C3-எஸ்.எஸ்.காலனி (ச.ஒ) காவல் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் என்பவர் 04.02.2020- ம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகர், BSNLகாந்திஜி காலனியில் உள்ள கிருத்துமால் கால்வாய் அருகே ரைமான்பீவி 32./20, க/பெ.சம்சுதீன், எல்லீஸ் நகர், BSNLகாந்திஜி காலனி, மதுரை என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.400/- ஆகியவற்றை உதவி ஆய்வாளர் கைப்பற்றினார்..
மதுரை மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.
மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராகவும் விபத்தில்லா மாநகராகவும் மாற்ற வேண்டும் என்பது மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்களின் மிகப்பெரிய கனவாகும்.
ஆகவே பொதுமக்களாகிய அனைவரும் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குற்றம் தொடர்பான முக்கிய தகவல்களை தயங்காமல் மதுரை மாநகர வாட்ஸ் ஆப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) குற்றச் சம்பவங்களை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பலாம். தகவல்கள் கொடுக்கும் அனைவரது பெயர், முகவரி, அலைபேசி எண், ரகசியம் காக்கப்படும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்