திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பவித்திரமாணிக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த – பவித்திரமாணிக்கம், திரு.வி.க நகரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் சுரேந்திரன் (வயது-23). மன்னார்குடி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவந்திரபுரம் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த – கர்தனாதபுரம், மாதாகோவில் தெருவை சேர்ந்த வில்லியம் பால்ராஜ் மகன் பிலிப்ஸ்ராஜ் (வயது-41). திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணலி தெற்குவெளி அய்யனார் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த – திருத்துறைப்பூண்டி, மணலி, மேலவெளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் @ ரஞ்சித்குமார் (வயது-28). முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமுத்தேவர் குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த – ஜாம்பவானோடை, தர்மன் கோவில் பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபாகரன் (வயது – 34). ஆகிய நான்கு நபர்கள் அதிரடி கைது.
மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1.550 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல். சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு, மன்னார்குடி தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவநேசன், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார், முத்துப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கழனியப்பன் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.