திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடியக்கமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த – அடியக்கமங்கலம்,ஜலாலுதின் மஸ்தான் தெருவை சேர்ந்த பர்மானுதீன் மகன் முகமது பைசல் ரஹ்மான் (வயது-31). என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெகதீசன் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.