திருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்மீகபுரம் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த – திருவாரூர், வன்மீகபுரம், தஞ்சை சாலை, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் @ அறுப்பு குமார் 47. என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1.100 கிராம் கஞ்சா, Weight & Sealing Machine ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.