திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை பாலகுடி ஆர்ச் அருகில் கஞ்சா விற்பனை செய்த – அத்திக்கடை, வடக்குத்தெருவை சேர்ந்த முகம்மது ரபீக் மகன் ராஜ்முகம்மது 22. என்பவர் கைது. மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்ரி, கொரடாச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.செல்வி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.