திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த – மன்னார்குடி, இடையர் எம்பேத்தி, M.G.R. நகரை சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் விக்கரம் (வயது-22). என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.ஸ்ரீநிதி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். மேலும், இது போன்று பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.