பெரம்பலூர்: பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குப்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் நிலைய காவலர்களுடன் புறப்பட்டு சங்குப்பேட்டையில் சோதனை செய்ததில்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த செல்வகுமார் (31 அழகிரி தெரு, 13 வந்து வார்டு, சங்குப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தும்,
அவரிடமிருந்து சுமார் ரூபாய். 40,000/- மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 100 ஐ பறிமுதல் செய்தும், மேற்படி செல்வகுமாரை காவல் நிலையம் அழைத்து வந்தார்.
பின் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) திரு.செந்தில்குமார் அவர்கள் அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை