பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த லப்பைக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமது என்பவரின் மகனான அப்துல்லா பாஷா (45) என்பவரை மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் அவர்கள் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் அளவுள்ள ரூபாய் 7000 மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றினார்.