திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல் – ஓகை பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், ஓடாவிமடத்தை சேர்ந்த மோகனன்தாஸ் என்பவரின் மகன் பாபு (எ) கானா பாபு (வயது – 30). மற்றும் கும்பகோணம், இளங்கோ நகர், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சக்திவேல் (வயது – 19). ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 1.100 Kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.