திருவாரூர் : திருவாரூர் வண்டிக்காரத் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருவாரூர், விஜயபுரம், கொடிக்கால் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் அருண் (எ) அருண்குமார் (வயது-26). மற்றும் நன்னிலம், ஶ்ரீவாஞ்சியம், புத்தாற்று பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நன்னிலம், பாக்கம் பருத்தியூர், வடக்குத்தெருவை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் அபிஷேக் (வயது-20). ஆகிய இருவர் கைது. மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 3000/- ரூபாய் மதிப்புள்ள 300 கிரம் கஞ்சா பறிமுதல் செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.