கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 16.03.2020, மாவட்டத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் உட் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவகர் IPS அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் வடசேரி உழவர் சந்தையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இருவரை வடசேரி உதவி ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்கள் விசாரித்தபோது தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வி மற்றும் காட்டாத்துறையை சேர்ந்த ஆன்டனி பெர்வின் என்பது தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்த போது 10 1/2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் மொத்தமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கபட்டது. உடனே குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு வடசேரி காவல் ஆய்வாளர் திரு. பெர்னார்ட் சேவியர் அவர்கள் u/s 8(C), r/w 20(b) (II) (B) NDPS Act படி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.