திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மறுகால்குறிச்சி, முப்புடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் என்ற ராம்கி (21), என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி குற்றவாளி மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி, அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளி, மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (10.09.2022), குற்றவாளி, குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.