திருவாரூர்: திருவாரூர் முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட – முத்துப்பேட்டை, இடும்பாவனம், கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மகேஷ் -32 என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முன்னதாக, இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக 6 வழக்குகள் உள்ளது.
இந்நிலையில், மேற்படி நபர் தொடர்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி இன்று (11.08.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக 21 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.