நெல்லை: நெல்லை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மாலிக்பெரோஸ்கான் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,மாலிக்பெரோஸ்கானை கைது செய்தனர்.