கோவை: காவல் துணை ஆணையர். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் இ.3 சரவணம்பட்டி திரு. என்.திருப்பதி அவர்களின் அறிவுரையின்படி உதவி ஆய்வாளர்திருமதி.சுகன்யா திரு.ஜெசங்கர் திரு.ஜேக்கப் ஆகியோர் குற்ற தடுப்பு சம்பந்தமாக சுண்ணாம்பு கால்வாய் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்க்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரிக்கும் போது தப்பி ஓடியவர்களை விரட்டி பிடித்து அவர்களை தணிக்கை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ 200. கிராம் மனிதர்களின் மன நிலை பாதிக்கும் கஞ்சா எனும் போதை பொருள் வைத்திருந்தார்கள் அவர்கள் சுவிக்ஸ், பெர்னாட் என்பவர் ஆவார்கள்.
மேற்படி குற்றவாளிகள் மீது இ.3 காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அணுப்பி வைக்கபட்டது.