திண்டுக்கல் : (13.09.2022), திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அச்சாம்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அச்சாம்பட்டியை சேர்ந்த சூர்யா (30), கண்ணன் (22), மற்றும் பெரிய மல்லணம்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (எ) டோனி (19), ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.700 கிலோ கிராம் கஞ்சா, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா