இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள வனபேச்சி அம்மன் கோவல் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சாயல்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திருச்சுழி அருகேயுள்ள நெல்லிகுளத்தை சேர்ந்த வீரசூரன் என்பதும், அவரிடம் சுமார் 21 கிலோ கஞ்சா மற்றும் வாள் போன்ற ஆயுதங்கள் இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, கடலாடி காவல் ஆய்வாளர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் வீரசூரன் மீது NDPS Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.