சென்னை: சென்னை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை, அப்பகுதியில் கண்காணித்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, மடக்கி பிடித்தனர். விசாரனையில், பிடிப்பட்டவர், எண்ணுார், பெரிய குப்பத்தைச் சேர்ந்த பிரேம், 27, என தெரியவந்தது.
அவரை, கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரனைக்கு பின், வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி .சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை