தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சேதுராஜன் உட்பட போலீசார் இன்று 23.12.2022 ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கழுகுமலை சம்பா நகர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியன் மகன் மதன்ராஜ் 19. மற்றும் கழுகுமலை பழங்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் 19. ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகள் மதன்ராஜ் மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















