திண்டுக்கல்: திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை நிலக்கோட்டை டி.எஸ்.பி திரு.சுகுமார்,இன்ஸ்பெக்டர் திரு.சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கு எஸ்.பி திரு.சீனிவாசன், மாவட்ட கலெக்டர் திரு.விசாகனுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து நவீன்குமார்,சேதுபதி, நாட்ராயன்,முருகன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா