தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T. சாம்சன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புளியங்குடி உட்கோட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்ற (07/04/2023) காலை தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் போன் செய்து சாகுல் ஹமீது என்பவரிடம் வழக்கம்போல் கஞ்சா கொண்டுவரக் கூறி காத்திருந்த தனிப்படையினர் சாகுல் ஹமீதை சுற்றிவழித்து பிடித்து அவரிடம் இருந்து 01 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர், இதன் தொடர்ச்சியாக சாகுல் ஹமீதிடம் விசாரணை செய்து அவர் கொடுத்த தகவலின் பெயரில் தொடர்ச்சியாக புளியங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் வாசுதேவநல்லூரை சேர்ந்த கண்ணன் ஆகிய 02 நபர்களிடமிருந்து 02 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி சாகுல் அமீது, ராஜ்குமார் மற்றும் கண்ணன் ஆகிய 03 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 03 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.