நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (30.07.2023) தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வேதாரண்யம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குரவாப்புலம் ரயில்வே கேட் அருகில் கஞ்சா மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்து மேலும், அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார் (TN 46 R 6022 Tata Sumo) மற்றும் இரண்டு இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.