தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரண்டஹள்ளி போலீசார் 21.03.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் தமிழக அரசால் தடை செய்யபட்ட கஞ்சா பொருட்கள் வைத்து இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த வாலிபர் பெல்லஅல்லியை சேர்ந்த தமிழ் 23 என்பது தெரிய வந்தது. பின்னர் மாரண்டஹள்ளி போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொருட்களை கைப்பற்றினர்.