பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினரால் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று 25.08.2021-ம் தேதி மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.செந்தமிழ்செல்வி அவர்கள் நிலைய காவலர்களுடன் மாலை ரோந்து அலுவலில் இருந்த போது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி லப்பைக்குடிக்காடு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ய அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நியாஸ் அகமது (22), த/பெ உமர்பாரூக், 351 ஜமாலியா நகர், லப்பைக்குடிக்காடு, குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்பவரையும் பறிமுதல் செய்த 1,200 கிராம் கஞ்சாவையும் எடுத்துக் கொண்டு உதவி ஆய்வாளர் திருமதி.செந்தமிழ் செல்வி அவர்கள் காவல் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை