தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்கள் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொமத்தம்பட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை விசாரித்து சோதனை செய்தபோது கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் மேற்கண்ட நபர் சின்னசாமி 41. கொமத்தம்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.பின்னர் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.