கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிபுரம் திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 18 வயதுடைய மாணவர் மற்றும் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொழிற்பயிற்சியில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது தெரியவந்தது. மாணவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.