தேனி: கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தேனி எஸ்.பி. திரு.டோங்ரே ப்ரவின் உமேஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவை தொடர்ந்து, உத்தமபாளையம் டி.எஸ்.பி உமாதேவி ஆலோசனையின்பேரில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் திருமதி. புவனேஸ்வரி, எஸ்.ஐ திரு.விஜய் ஆனந்த் மற்றும் தனிப்படையினர், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திடீர் என போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை பிடித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்















