கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லை பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.அருள்பிரகாஷ் என்பவர் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் R.முத்துகுமார்(வயது-40) என்பவரை கைது செய்து அவரிடம்யிருந்து 600கிராம் கஞ்சா பறிமுதல் செய்தும், மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.