ஈரோடு : ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ரங்கநாதன் தனது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள் கஞ்சா பயிர் செய்து வளர்த்து வந்த ரங்கநாதனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி