விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் பாண்டியன்நகர் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காரியாபட்டி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் காரியாபட்டி காவல்நிலைய ஆய்வாளர் திரு.மூக்கன் தலைமையில், பாண்டியன் நகரில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது காரில் போலீசார் சோதனை செய்தனர்.
காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாமிக்கண்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.