திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
நெல்லூரில் ஒரு வீட்டில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்துப்பாண்டி (30), சரவணன் (29) மற்றும் முத்துராஜ் (29) ஆகிய 3 பேரை 30.11.19 கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா