மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களான கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அந்தவகையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி
உசிலம்பட்டி பகுதியில் ரோந்து செய்தபோது குமார் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேற்படி குமாரை காரணம் கூறி கைது செய்து, வழக்குப் பதிவு செய்ய நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து வருகிறார்.
மேலும் விசாரணையில் மேற்படி குமார் என்பவர் உசிலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரியவருகிறது.
பள்ளி மாணவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பள்ளி மாணவர்களின் முழுக்கவனமும் அவர்கள் படிப்பின் மீதே இருக்க வேண்டும் என்றும், இதுபோன்று பள்ளிச் சிறுவர்களை போதைப்பொருள் விற்பனை செய்ய யாரேனும் வற்புறுத்தினாலும் அல்லது ஈடுபட தூண்டினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி