வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்கும் பொருட்டுகாவல்கண்காணிப்பாளர்திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை கிராமத்தில் வாழைப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திரு.உலகநாதன், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் திரு.கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது தேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (22), என்பவர் தனது நிலத்தில் 25 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போன்று ரவி என்பவரது மனைவி கமலா (50) என்பவரது நிலத்தில் 50 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து, முத்துக்குமார், கமலா ஆகிய இருவரையும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்