கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியான தேர்பட்டி MGR நகரில் எதிரிகுற்றவாளிக்கு சொந்தமான வீட்டில் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது. கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 940 கிராம் கஞ்சா செடி பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.