செங்கல்பட்டு : செங்கல்பட்டு பீடி நகரை சேர்ந்த காதர் பாட்ஷா மகன் சல்மான்கான் வயது (29). இவர் ஒழலூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா செடி வளர்த்தனர் ரகசிய தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பாலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் விரைந்து சென்று கஞ்சா செடியை அழித்தனர் இதில் சல்மான்கான் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட மத்திய சிறை சாலையில் அடைத்தனர். இதில் மதுவிலக்கு காவலர் 10 க்கு மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















