கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏத்தகிணறு பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது.
கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த நபரை கைது செய்து அவர் நிலத்திலிருந்து சுமார் 35 கஞ்சா செடிகள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே நெருப்பு வைத்து அழித்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.