கோவை: துடியலூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது நல்லாம்பாளையம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நல்லாம் பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி என்கிற குட்டி (33 )மற்றும் பாலமுருகன் என்ற சொரிபாலன் (32) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைப்போல துடியலூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரபு நகர் பகுதியில் கஞ்சா விற்ற கொண்டிருந்தார் அப்துல் லத்தீப் என்பவரின் மகன் சாபிக்(19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.