கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ESI ரிங் ரோட்டில் உள்ள DTDC கொரியர் அலுவலகம் அருகே கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று அங்கே இருந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது, கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 28 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.