பழனி:ஆந்திராவில் இருந்து பழனிக்கு கஞ்சா கடத்தி வருவதாக பழனி டிஎஸ்பி சிவாவிற்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாலுகா சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தலை பிடிக்க டி.எஸ்.பி சிவா உத்தரவிட்டார். இதையடுத்து கஞ்சா கடத்தலை உறுதி செய்துகொண்ட போலீசார் செம்பட்டி அருகே வந்த ஈச்சேர் பருத்தி ஏற்றி வந்த ஈச்சேர் லாரியை தடுத்துநிறுத்தி சோதனையிட்டதில் பருத்திக்கு இடையில் 33பொட்டலங்களில் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது.
வாகனத்தை ஓட்டிவந்த தங்கவேல் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரை விசாரணை செய்ததில் ஆந்திரமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு பருத்திலோடு ஏற்றி சென்றபோது காக்கிநாடா அருகில் உள்ள துணி என்ற ஊரில் லாரியை நிறுத்தி விஜயானந்த், சிரஞ்சிவி, ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து கஞ்சாவை லாரியில் கடத்திவந்து பழனியில் ஒப்படைக்க இருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்து 33 பொட்டலங்களில் 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் லாரியின் உரிமையாளர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஜீவா என்பதும், அவரிடம் ஓட்டுனராக பணிபுரிந்துவந்த தங்கவேல் மற்றும் வினோத்ராஜ் ஆகியஇருவரும் காசுக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தியவர்களுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் பலமுறை இதுபோன்று கஞ்சா கடத்திவந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா