தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாழுக்க பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்து வருவதாக வந்த புகாரினை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை இனம் கண்டு கைது செய்ய பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்கள், உத்தரவின் படி காவல் உதவி ஆய்வாளர் திரு முத்துக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர் பிரபு மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகர், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று (9-9-2023) சென்னையில் இருந்து பாபநாசத்திற்கு பஸ்சில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாபநாசம் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்திருந்து கண்காணித்து வந்த தனிப்படை போலீசார் அங்கு வந்த பேருந்து ஒன்றில் சந்தேகப்படும் படியாக வந்து இறங்கிய சென்னையில் படித்து வரும் கல்லூரி மாணவர்களான அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜம்புகேஸ்வரன் (22). மற்றும் அவரின் நண்பரான விருத்தாச்சலம் மங்களம் பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது சுலைமான் (19). ஆகிய இரு மாணவர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டார்கள்.
அதில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது . அதனை தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரு மாணவர்களையும், அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவை வாங்க காத்திருந்த அய்யம்பேட்டை சோழமங்களம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மகேந்திரன்(25). மற்றும் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டை (எ) கதிர்வேலு (22). ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கைது செய்யப்பட்ட அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் கதிர் என்கின்ற கட்டைக் கதிர்வேலு ஆகிய இருவர் மீதும் தஞ்சாவூர் நகர காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கடத்தி வரபட்ட கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இன்று (10-9-2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதியரசர் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்