சேலம் : சேலம் மாவட்டம், ஒமலூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட ஒமலூர் தாலுக்க பாகல்பட்டி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஒமலூர் காவல் நிலையத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் ஒமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா உத்தரவு பேரில் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன் தலைமையில் திரு.கருணாகரன் உதவி ஆய்வளார் மற்றும் தலைமை காவலர் ஐய்யப்பன் மற்றும் தலைமை காவலர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று பார்த்த போது அங்கு சந்தேகம் படி ஒரு நபர் வாகனத்தில் நின்று கொண்டு இருந்தான் அவனை சோதனை செய்ததில் அவரிடம் 100 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்தது. மேலும் அவனை விசாரனை செய்ததில் ஜீவா (20). என்பர் பூமிநாயக்கன் பட்டியை சேந்தவர் என்று தெரிந்து. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஒப்படைத்து. சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

S. ஹரிகரன்