திருவாரூர்: திருவாரூர்நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வெண்ணி சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையின் போது ஓடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த – 1. நீலகண்ட நாயக் (36). த/பெ. தம்பு நாயக், கஜபதி மாவட்டம், ஒடிசா 2. மார்சல் டெரான்ஸ் ராஜா (40). த/பெ. தாமஸ், நாகப்பட்டிணம் 3.முனீஷ்வரன் த/பெ.முத்துசாமி, ஆலங்காரன்காடு, பெரியகுத்தகை, வேதாரண்யம், 4. குமார் த/பெ. நாகூரான், ராஜாமடம், நடுத்தெரு, அதிராம்பட்டிணம், தஞ்சாவூர் மாவட்டம், ஆகிய நால்வர் கைது செய்யப்படனர், மேற்படி விசாரணையில் ஒடிசாவிலிருந்து இலங்கைக்கு தமிழக கடல் மார்க்கமாக விற்பனைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரியவந்ததின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நால்வரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
மேற்கண்ட நபர்களிடமிருந்து சுமார் 110 கிலோ (மதிப்பு ரூ.25,000,00) கஞ்சா, ஆம்புலன்ஸ், இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து, கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.