வேலூர் : வேலூர் மாவட்டம், பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேர வாகன சோதனையின் போது, வெளிமாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் வழக்கில் வாகன சோதனை மேற்கொண்டிருந்த காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் மறைத்து எடுத்துவரப்பட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2,45,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பணம் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சா கடத்தல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
















