கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி.ரேணுகாதேவி அங்குள்ள கோவில்மேடு புளியமரம் தண்ணிர் டேங்க் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த 3 ஆசாமிகளிடம் விசாரணை நடத்தினார்அவர்கள் கஞ்சா கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் பிரபு நகரைச்சேர்ந்த ராஜ்குமார் வேலாண்டி பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் 21 கவுண்டம்பாளையம் சந்தோஷ் குமார் 19 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் ,2 செல்போன் (2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.