கோவை : கோவை அருகே உள்ள கண்ணம்பாளையம் ரோட்டில் சூலூர் சப்- இன்ஸ்பெக்டர் இராதாகிருஷ்ணன் நேற்று வாகன சோதனை நடத்தினார் அப்போது பைக்கில் வந்த 3 ஆசாமிகளை சோதனை செய்தார் அவர்களிடம் 1250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையொட்டி 3 பேரும் கைது செய்யப்பட்டனர் கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் 3 பேரும் அங்குள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த தினேஷ் வயது 20 ஹரிகிருஷ்ணன் வயது 24 ஸ்ரீநாத் வயது 20என்பது தெரியவந்தது அவர் களிடம் விசாரணை நடந்து வருகிறது இதேபோல பொள்ளாச்சி யைஅடுத்த சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் ஜெயேஷ்வயது 29 இவர் நேற்று கஞ்சா விற்று கொண்டிருந்த போது இவர் கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கோவையிலிருந்து நமது நிருபர்

A. கோகுல்















