கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக, திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயிலில் இருவா் கஞ்சா கடத்தி வருவதாக கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி திரு.மனோகரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கோவை ரயில் நிலையத்துக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீஸாா், பாதுகாப்புப் படையினா் கண்காணித்தனா். 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவா்களைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்த செல்லதுரை 51), கதிரேசன் 35 என்பதும், இவா்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து 44 கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு ரயில் மூலம் கோவைக்கு வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் தேனிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், மேற்கண்ட இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 44 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.