செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறையின் சோதனையின் போது பெரும்பாக்கம் அரசங்கழணி பகுதியை சேர்ந்த ஏரிக்கரையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா விற்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கத் துறையினரின் விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த தனுர் ஜெய்ஹாரா வயது (34). மேலும் கமல் சைலன் கிலா வயது (24). இவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர் என்பவர்களை சோதனை செய்ததில் 101கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்த கஞ்சாவை பெரும்பாக்கம் பகுதியில் கூலித் தொழிலாளர்களுக்கு விற்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்