திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வடகண்டம் வெட்டாற்று பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது குடவாசல் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த TN 03 J 5017 என்ற Maruthi Shift காரை சோதனை செய்த போது அதில் இரண்டு பண்டில்களில் 4.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இரண்டு அரிவாள், பெரிய சுத்தியல், 5– செல்போன்கள் மற்றும் Jio Modem ஆகியயை பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கண்ட பொருட்களை கடத்தி வந்த சதீஷ் த/பெ கோவிந்தராஜ் வடக்கு தெரு, அரசவணங்காடு மற்றும் பாலகணபதி த/பெ ஸ்ரீதர், காமராஜர் தெரு, பவித்திரமாணிக்கம் ஆகியோர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 1,51,200/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் த/பெ இளங்கோவன், காமராஜர் தெரு, பவித்திரமாணிக்கம் மற்றும் கலைச்செல்வன் த/பெ பழனிவேல், அகரத்திருநல்லூர் ஆகிய இருவரும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பாராட்டினார்கள்.