திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த – 1.மகேஷ் (43). த/பெ.ராஜேந்திரன், மணல்மேடு, வடகாடு கோவிலூர், மற்றும் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக ரவுடிசம், திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2. அசோக் குமார் (33), த/பெ.ராஜப்பா, கொம்புகாரன் தெரு, பாலையூர், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். மேற்படி, நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி இன்று (28.12.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள். ஓரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
















